157
நட்புறவு நாடுகளின் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கான தயார்படுத்தல்களைத் தீவிரப்படுத்துமாறு தனது இராணுவத் தளபதிகளுக்கு வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உத்தரவிட்டுள்ளது. உக்ரேனுக்குள் ரஹ்யா நுழைந்தமையையடுத்தே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், நூற்றுக்கணக்கான யுத்த விமானங்களும், கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நேட்டோவின் கிழக்குப் பிராந்தியத்தில் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணங்கப்பட்டுள்ளது.
நேட்டோவின் 30 தேசங்களின் மெய்நிகர் அவசர சந்திப்பை இன்று கூட்டியுள்ளதாக நேட்டோவின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்துள்ளார்
Spread the love