வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நெதர்லாந்தைச் சோ்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
நெதர்லாந்தைச் சேர்ந்த 67 வயதுடைய Kalidien Nisha Gatoen என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது ரிக்ரொக் சமூக வலைத்தளத்தினூடாக 37 வயதான இலங்கையைச் சோ்ந்த இளைஞா் ஒருவருடன் காதல் தொடர்பு பேணிவந்துள்ள குறித்த பெண், அவரை தேடி இலங்கைக்கு சென்று குறித்த இளைஞருடன் வீட்டில் தங்கி இருந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளதாக காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.
உயிரிழப்புக்கான காரணம் எதுவும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.