Home உலகம் விண்வெளிக்கும் பரவுகின்ற பதற்றம்

விண்வெளிக்கும் பரவுகின்ற பதற்றம்

by admin

விண்வெளி நிலையம் வீழ்வதை ரஷ்யா இன்றித் தடுக்க முடியுமா? -அந்நாட்டு விஞ்ஞானி கேள்வி

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி இருக்கின்ற போர்ப்பதற்றம் விண்வெளியில் இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்பாடுகளில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.அங்குஅமைதி நிலவுகிறது என்பதை நாசாஅதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (international space station) ரஷ்யாவின் துணையின்றி அதன் சுற்றுப்பாதையில் வைத்திருப்பதற்கான தீர்வு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்புக் காரணமாக ரஷ்யா சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விண்வெளி பாதுகாப்புத் தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையம் (international space station) அமெரிக்கா -ரஷ்யா இரு நாடுகளினதும் கூட்டு நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் போர்ப் பதற்றம் அதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருபக்கத்துவிண்வெளி அறிவியல் குழுக்களும் வழமைபோலத் தங்களுக்குள் தொடர்புகளையும் பரிமாற்றங்களையும் பேணிக்கூட்டாக இயங்கி வருகின்றன.

எனினும் நாசா (NASA) நிலைமையை மதிப்பீடு செய்துவருகின்றது- என அதன் இணைநிர்வாகிகளில் ஒருவரான கதி லூடேர்ஸ் (Kathy Lueders) தெரிவித்திருக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தின் சரியான செயற்பாட்டிற்கு ரஷ்யாவின்பங்கு அவசியமாகும். அதன் உந்து விசைஅமைப்பு (propulsion system) சுற்றுப் பாதையில் சீரமைப்புகளைச் செய்வதற்குப் பெரிதும் உதவுகின்றது.

இந்த நிலையில் ரஷ்ய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தின்(Russian space agency,) பணிப்பாளர் திமித்ரி ரோகோஸின் (Dmitry Rogozin) கடந்த வாரம் தொடர்ச்சியாகப் பதிவிட்ட ருவீற்றர் செய்திகளில், அமெரிக்கா தங்கள் கூட்டுச் செயற்பாட்டைக் குலைக்க விரும்புகிறது என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

“சர்வதேச விண்வெளி நிலையம் அதன்சுற்றுப்பாதையை விட்டு விலகி கட்டுப்பாட்டை இழந்தால் அது அமெரிக்கா மீதோ அல்லது ஐரோப்பா மீதோ வீழ்வதை ரஷ்யாவின் உதவி இல்லாமல் உங்களால் தவிர்க்க முயுமா”? – என்றும்அவர் பீதியூட்டும் கேள்வியை எழுப்பி இருந்தார்.

அவரது ருவீற்றர் பதிவுகள் ஒருவித பதற்ற நிலைமையை விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியது. இதேவேளை,பிரெஞ்சு கயானாவில் (French Guiana) உள்ள குரோவ் (Kourou) விண்வெளி ஏவுதளத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருக்கிறது.

—————————————————————— –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 01-03-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More