இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று(2) 7 1/2 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
அந்தவகையில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேரமும் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி ஏற்பாட்டினை அடுத்த வாரத்திற்குள் மேற்கொள்ளாவிட்டால், மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது