222
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன் , தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 145 போட்டிகளில் விளையாடியஷேன் வோர்ன் இதுவரை 708 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற ஷேன் வோர்ன் 2013ஆம் ஆண்டு வரை இருபதுக்கு 20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளாா்.
Spread the love