162
பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் கிஸ்ஸா குவானி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்ததது 30 பேர் பலியாகியுள்ளனா். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் அதிகமானவா்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே குறைந்ததது 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50-இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுவொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love