Home உலகம் ரஷ்யப் படையின் மேஜர் ஜெனரல் சினப்பர் தாக்குதலில் உயிரிழந்தார்

ரஷ்யப் படையின் மேஜர் ஜெனரல் சினப்பர் தாக்குதலில் உயிரிழந்தார்

by admin
(படம் :மேஜர் ஜெனரல் ஆன்ட்ரே சுகோவெட்ஸ்கி)

வான்பறப்புத் தடைவலயம் நிறுவும் கோரிக்கையை நேட்டோ நிராகரிப்பு

உக்ரைன் போரில் ரஷ்யப்படைகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்யாவின் ஏழாவது வான்வழித் தரையிறக்கப் பிரிவின் கட்டளைத் தளபதியும் மத்திய இராணுவ மாவட்டத்தின் கூட்டு ஆயுதப்படைகளது உப தளபதியுமாகிய47 வயதுடைய மேஜர் ஜெனரல் ஆன்ட்ரே சுகோவெட்ஸ்கி (Major General Andrey Sukhovetsky) வான் வழித் தரையிறக்க முயற்சி ஒன்றின் போது சினப்பர் சூட்டுக்கு இலக்கானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.]

தலைநகர் கீவுக்கு வட கிழக்கே Hostomelநகரில் நடத்தப்பட்ட தரையிறக்கத் தாக்குதலிலேயே தளபதி சிக்குண்டார் என்றுஉக்ரைன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் என்று ரஷ்யா அறிவித்த498படையினரில் அதி உயர் தர நிலையில்உள்ளவர் சுகோவெட்ஸ்கியே ஆவர்.

ஆனால் சுமார் 9அயிரம் ரஷ்யப்படையினரைத் தாங்கள் கொன்றுவிட்டதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேஜர் ஜென ரலின் மரணத்தை ரஷ்யா முறைப்படி அறிவிக்கவில்லை. அவரது சக படைவீரர்கள் அந்தச் செய்தியை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர். அவர் எங்கே எவ்வாறு உயிரிழந்தார் என்பதும் சுயாதீன செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இராணுவத்தின் வான்வழித் தரையிறக்கக் குழுக்களின் சண்டைகளில் பல சாதனைகளைப் புரிந்தவர் சுகோவெட்ஸ்கி. 2014 இல் கிரிமியா ஆக்கிரமிப்புப் போரிலும் முக்கிய பங்கு வகித்தவர்.அவரது மரணம் உக்ரைன் போரில் ரஷ்யப்படைகள் சந்தித்த குறிப்பிடத்தக்க பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இதேவேளை, உக்ரைனுக்கு மேலே வான்பறப்புத் தடை வலயம்(no-fly zone)ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பின் செயலாளர்நாயகம் நிராகரித்திருக்கிறார்.

உக்ரை னில் தரை, மற்றும் ஆகாய மார்க்கமாக எந்த வழிகளிலும் தலையிடுவதில்லைஎன்ற நேட்டோவின் முடிவில் மாற்றம்இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்திஉள்ளார். நேட்டோவின் அத்தகைய தலையீடு உக்ரைன் போரை ஐரோப்பா முழுவதுக்குமான யுத்தமாக மாற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின்ஆலை அமைந்துள்ள Zaporizhzhia பகுதிக்கு சண்டையை விஸ்தரித்தமைக்காகரஷ்யாவுக்கு நேட்டோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அணு ஆலைப் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ள போதிலும் அங்குள்ள ஆறு அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளன என்பதைசர்வதேச அணு எரிசக்தி முகவரகம் (International Atomic Energy Agency – IAEA)உறுதிப்படுத்தியிருக்கிறது.

——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 04-03-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More