Home உலகம் சோவியத் கால போர் விமானங்களைஉக்ரைனுக்கு தர அமெ. ஆலோசனை

சோவியத் கால போர் விமானங்களைஉக்ரைனுக்கு தர அமெ. ஆலோசனை

by admin

வான் தளங்களை அழிக்க ரஷ்யா குறி

போலந்திடம் உள்ள சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பில் அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகிறது.”வான்பறப்புதடை வலயம் ஒன்றை அறிவியுங்கள், அல்லது, போர் விமானங்களைத் தாருங்கள் “என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky)அமெரிக்க செனட்டர்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.

நவீன யுத்த விமானங்களை விடவும் தங்களது விமானிகளுக்குப் பரீட்சியமான – இலகுவாக அவர்களால் இயக்கக் கூடிய – விமானங்களைத் தருவதே பயனுடையது என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதனை அடுத்தே,அதிபர் ஜோ பைடன் போலந்து அரசுடன் இது தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். சோவியத்காலத்து – பழைய “மிக் -29″(மிக்-29) போர்விமானங்களையும்”Su-25” தாக்குதல் விமானங்களையும் உக்ரைனுக்கு வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்படவுள்ளது.

போலந்து தன்வசம் உள்ள விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும். அதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்தை அமெரிக்கா தனது விமானங்களைப் போலந்துக்கு வழங்கிச் சரிசெய்துகொள்ளும் வகையில் உடன்பாடு அமையவுள்ளது.

இதே உத்தரவாதங்களின் அடிப்படையில் பல்கேரியா, ஸ்லோவேனியா ஆகியனவும் தம்வசம் உள்ள பழை விமானங்களை உக்ரைனுக்கு வழங்க ஆயத்தமாக உள்ளன. இந்த விமானப் பரிமாற்ற உடன்பாட்டுக்கு அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

மேற்குலகின் போர் விமானங்கள் கிடைப்பதற்கு முன்பாக உக்ரைன் படைகளது வான் தளங்களை அழிப்பதில் ரஷ்யாகுறியாக உள்ளது. தலைநகரில் இருந்து200 கிலோ மீற்றர்கள் தொலைவில் உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள வின்னிற்சியா (Vinnytsia) நகர விமானநிலையத்தை ரஷ்யப்படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளன.

உக்ரைன் நாட்டின் போர் விமானங்கள் தங்கிச் செல்ல ருமேனியா இடமளிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள ரஷ்யா அதுபோரில் ஒரு தலையீடாகவே பார்க்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

*முந்திய வரலாறு :அணு ஆயுத பலத்தில் பிாித்தானியாவை விஞ்சியதாக இருந்த உக்ரைன் இன்று பழைய சோவியத் விமானங்களைக் கேட்டு உலகிடம் கையேந்தும் நிலைஉருவானதுக்கு புடாபெஸ்ட் உடன்படிக்கையும் (Budapest Memorandum) ஒரு காரணமாகும்.

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில்இருந்து பிரிந்த பிறகு 1994 டிசெம்பரில் ஹங்கேரி தலைநகரில் அணுவாயுதக் குறைப்புடன் தொடர்புடைய முக்கிய உடன்படிக்கை ஒன்றில் அமெரிக்கா, பிாித்தானியா , ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், கசகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் ஒப்பமிட்டன.

இந்த உடன்படிக்கை வழங்கிய உத்தரவாதத்தின் பேரிலேயே உக்ரைன் தனது வசம் இருந்த பெரும் அணுவாயுதக் கிட்டங்கியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதற்கு இணங்கியது.உலகின் அணு வல்லரசுகளாக இருந்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிாித்தானியா மூன்று நாடுகளும் இந்த உடன்படிக்கையில் உக்ரைனின் “சுதந்திரம் மற்றும் இறையாண்மையையும் அதன் அப்போதைய எல்லைகளையும் மதிக்கவும் ” மற்றும் நாட்டிற்கு எதிரான “அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும்” உறுதியளித்தன.

தன் வசம் இருந்த சுமார் ஆயிரத்து 900 மூலோபாய அணு ஆயுதங்களை உள்ளடக்கிய உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் களஞ்சியத்தைக் கைவிடுமாறு உக்ரேனிய அரசாங்கத்தை வற்புறுத்துவதில் அந்த உறுதிமொழிகள் முக்கிய பங்கு வகித்தன.இந்த உடன்படிக்கையை மீறியே 2014இல் ரஷ்யா உக்ரைனின் ஒரு பகுதியாகிய கிரிமியாவை ஆக்கிரமித்து தன்வசம் இணைத்துக் கொண்டது.உக்ரைன்போர் பற்றிய விவாதங்களில் பலர் இந்த புடாபெஸ்ட் ஒப்பந்த மீறலைக் குறிப்பிடத் தவறுவதை அவதானிக்க முடிகிறது.

—————————————————————— –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 07-03-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More