கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் இன்று( 11-03-2022) பகல் விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் பக்தர்கள் யாழ் புத்தூர் பண்டமரவடிக்கு சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக காணப்படுகின்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெற உள்ளது
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகியது இன்று பகல் 12 மணிக்கு ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் வைபவம் இடம்பெற்றதையடுத்து
யாழ் தென்மராட்சி புத்தூர் சந்தியிலுள்ள பண்டமரவடிக்கு சென்று பொங்கலுக்கான பண்டம் எடுத்து வரும் மரபுகளுக்கு அமைய பிற்பகல் மாட்டு வண்டிகளில் தொண்டர்கள் ஆலய முன்றலில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
தொன்று தொட்டு பேணப்படும் மரபுகளுக்கு அமைவாக இவ்வாறு புறப்பட்ட இவர்கள் யாழ் மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமரவடிக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பொங்கலுக்கான பொருட்களை எடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி ஆலயத்தை வந்தடைந்து அங்கே பொங்கல் வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-1.png)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-2.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-3.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-4.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-7.png)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/03/karachi-9.png)