தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழ்நாடு – ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றப்பத்திரத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கைது செய்யும் வேளையும் வலைகளை தொடக்கறுத்து வைத்திருக்காமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்கள் நீரியல்வளத்துறையினரால் முன்வைக்கப்பட்டது.
இரு குற்றங்களுக்கும் தலா ஆறு மாத சாதாரண சிறைத்தண்டணை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டார்.