221
மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று (19) சனிக்கிழமை காலை 7 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் இறை மக்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
Spread the love