மக்களுடைய எதிர்ப்பையும் போராட்டத்தையும் அடுத்து கந்தரோடை விகாரைக்கு செல்லும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.
கந்தரோடை விகாரையில் புத்தர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது பணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவற்தறையினரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.