307
ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சீதாவக ஆற்றின் தெஹியோவிட்ட யோகம பாலத்திற்கு அருகில் யாத்திரை சென்ற குழுவினரில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த குறித்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். பின்னர் பிரதேசவாசிகளால் மூவரும் மீட்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இரு இளைஞர்களும் அங்கு உயிரிழந்ததாக தெஹியோவிட காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Spread the love