ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவா்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் 15 பேரும், நுகேகொட உதவி காவல்துறை அத்தியட்சகா் உட்பட 3 காவல்துறையினா் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நான்கு பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், எாிவாயு , மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது