182
யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை சேர்ந்த 6 பேர் குறித்த தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது
இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் நீச்சல் தடாகத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் காணப்பட்டதனை அவதானித்து அது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவித்தனர். தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love