கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மோதரை காவற்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த சிலர் காவல் நிலையம் சென்றுள்ளனர்.
இளம் ஊடகவியலாளரும் சமூக ஊடக ஆர்வலருமான அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகியாகவும் செயற்பட்டுள்ளார்.
மோதரை காவற்துறையில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருந்தது.
எனினும், மோதரை காவல் நிலையத்தில் அவ்வாறான ஒருவர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையிலேயே, அவர் மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு