
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினர் நேற்றுக் காலை 08.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல்-102 என்ற விமானத்தில் மாலைதீவு நோக்கிச் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி மற்றும் பாதுகாப்பு கமெரா அமைப்பு சீர்குலைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் ஊடாக விமானத்துக்குள் நுழைவதற்கு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment