225
இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீடே சேதமாகியுள்ளது.
யாழில் இன்றைய தினம் மதியம் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்நிலையில் குறித்த வீட்டின் மீது இடி விழுந்ததில் வீட்டின் முன் பகுதியும், முன் பகுதியுடன் இணைத்து போடப்பட்டிருந்த கொட்டகையும் சேதமடைந்துள்ளது. அத்துடன் கொட்டகைக்குள் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
Spread the love