இலங்கை பிரதான செய்திகள்

மேலும் ஐந்து குடும்பத்தை சேர்ந்த 19 தமிழர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
 இதனால் இலங்கையில் இருந்து  தனுஷ்கோடிக்கு  சென்ற 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை இரண்டு கைக் குழந்தையுடன்; 5 குடும்பத்தை சேர்ந்த மேலும்  19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.


தற்போது  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என  கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்ததது.


இந்நிலையில் நேற்று சனிக்கிழமை (9) இரவு  ஒரு   படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில்  சென்று இறங்கி உள்ளனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினா் அவா்களை மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று மன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை (9) இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு   படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை தனுஷ்கோடி சென்று இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.  அவா்களிடமும் மண்டபம் மெரைன் காவல்துறையினா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் குறித்த 19 இலங்கை  தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.