பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நேற்று சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவா் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் புதிய பிரதமரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்ததையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது.
இந்தநிலையில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகின்றது