174
அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்த நிலையில், சந்திப்பு இறுதி இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை எனவும் கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Spread the love