171
சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings இனால் இலங்கையின் அந்நியச் செலாவணி தரப்படுத்தல் “CCC” இலிருந்து “CC”க்கு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வெளியக கடன் மீளச் செலுத்தும் அழுத்தங்கள் போன்ற காரணிகளை கவனத்தில் கொண்டு இந்தத் தரப்படுத்தலை வழங்கியுள்ளது.
இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் மீள் கட்டமைப்பு சிக்கல்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனைப் பூர்த்தி செய்வதற்கு சில மாதங்கள் வரை செல்லலாம் என தரப்படுத்தல் முகவர் அமைப்பு நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Spread the love