இலங்கை பிரதான செய்திகள்

கனடாவிலிருந்து பணம் அனுப்பி யாழில் வீடுடைப்பு

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறைக்கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து,  ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொறுக்கியத்துடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து  தப்பி சென்றுள்ளனர். 


சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேவேளை , வீட்டின் உரிமையாளருடன் கனடாவில் உள்ள நபர் ஒருவர் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் , அவரது தூண்டுதலில் யாழில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற் கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.