151
யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி (வயது 59) எனும் குடும்பப் பெண்ணே உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதனால் அவா் உயிாிழந்துள்ளா்ா. பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Spread the love