வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்றிருந்தநிலையில் நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது நாளாக நேற்றுக் காலை கடற்படையினர், இராணுவத்தினர், காவல்துறையினா் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொத்மலை நீர்தேக்கத்தின் மின் உற்பத்திக்காக நீரை வழங்கும் நீர் தாங்கியிலிருந்து யுவதி ஒருவரதும் மற்றும் இளைஞன் ஒருவரதும் சடலங்கள் மீட்கப்பட்கப்பட்டள்ளன. . இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.
சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதி ஒருவரினது சடலம் நேற்றுக் (13) காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது