உகண்டாவின் நிதித் துறையின் இடர்கள் சர்வதேச கட்டமைப்புகளால் கறுப்புப்பட்டியலில் உள்வாங்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பணச் சலவை மோசடி போன்ற நிதிக் குற்றங்களை தவிர்க்கும் பணிகளை முன்னெடுக்கத் தவறியிருந்தமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உகண்டா சாம்பல் நிற பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
பணச் சலவை மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதை தவிர்த்துக் கொள்வது போன்றவற்றுக்கான கொள்கைகளை கட்டமைப்பது பற்றிய G7 நாடுகளின் முன்னெடுப்பாக அமைந்துள்ள இந்த நிதிச் செயற்பாட்டு செயலணி (FATF) இன் தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமை காரணமாக இந்த நிலை எழுந்துள்ளது.
இதன் விளைவாக உகண்டாவிலிருந்து எழும் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது உகண்டாவின் நிதிக் கட்டமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் நிதிப் பரிமாற்றம் போன்றன சர்வதேச கட்டமைப்புகளில் பெரும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படும். இதனால் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களை பூர்த்தி செய்வதில் அதிகளவு தாமதம் ஏற்படும்.
வியாபார கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதில் தாமதம் ஏற்படுவதுடன், வியாபாரங்களை முன்னெடுப்பதற்கான செலவீனங்களும் அதிகரிக்கும். ஒரு நாடு கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டினுள் வரும் அல்லது வெளியேறும் பணத்தின் நிலையை உறுதி செய்யும் வரை அந்தக் கொடுக்கல் வாங்கல்களை தடைப்படுத்தி வைத்திருக்க வேண்டி ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கறுப்புப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவதை தவிர்க்கும் வகையில், உகாண்டாவினால் 2022 மே மாதத்தில் மீளமைக்கப்பட்ட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் தற்போதைய அறிக்கையில் காணப்படும் இடைவெளிகள் நிவர்த்தி செய்யப்பட்டு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும். பணச் சலவை மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பு போன்றவற்றை தவிரக்கும் செயற்பாடுகள் போதியளவு திருப்திகரமானதாக அமைந்திருக்காத நிலையில் அவ்வாறான நாடுகள் சாம்பல் நிரலில் உள்வாங்கப்படுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்துள்ள