165
அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர் இவ்வாறு சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love