152
காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடைபெறும் போராட்டம் இன்று(26) 18ஆவது நாளாகவும் தொடா்கின்றது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சி, இன, மத, மொழி பேதமின்றி இளைஞர் – யுவதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதடதுடன் , அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love