165
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு நிறுவனம் – சிறுவர் வைத்தியசாலை சங்கம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்காவில் கடந்த வாரம் மாத்திரம் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love