217
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு 148 வாக்குகளும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு 65 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
Spread the love