பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி விலக சொன்னாரா? இல்லை என்கிறது பிரதமர் அலுவலகம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுத்தலுக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவித்திருந்தன.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறான எந்தக் கோரிக்கையும் ஜனாதிபதியால் விடுக்கப்படவில்லை என்றும், இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையொப்பம் இடவில்லை என்றும் பிரதமர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது