அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினம் – கனேடிய உயர்ஸ்தானிகர்!
அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.
இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர கால நிலை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை!
அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
வேலைநிறுத்தம் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை கோரியுள்ளது.
அவசர நிலை நெருக்கடி நிலைக்கு தீர்வு அல்ல!
அவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்ற விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சம் மற்றும் வன்முறையின்றி இந்த சூழ்நிலையை கையாள முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (a)