இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனைத் தொிவித்துள்ளாா்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாகவும் நாங்கள் தெரிவிக்கின்றோம்
இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என அவா் தொிவித்துள்ளாா்