நாடு பேரழிவிற்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பு தொடர்ந்தும் நிற்கும் என்றும் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயங்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டு வரப்பட்ட 21வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும், பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் செயற்படும் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த தீர்மானத்திற்கும், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இல்லை எனவும், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.