158
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இன்று மாலை 7 மணி முதல் நாளை (10.05.22) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Spread the love