Home இலங்கைமகிந்தவின் வீடும் ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் தீக்கிரை

மகிந்தவின் வீடும் ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் தீக்கிரை

by admin

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் குருநாகலிலுள்ள வீடும் ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் , எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு , ஹொன்னந்தர பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடு , கேகாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிபால ஹேரத்தின் வீடுக்கு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையமொன்று  என்பற்வுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More