188
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் -அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகஅ தெரிவிக்கப்படுகின்றது.
அமைதிப் போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் கடந்த 9 ஆம் திகதி ‘ மைனா கோ கம ‘ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love