நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(11) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் தினங்களில் நாட்டின் முக்கிய அரசியல் நிலைமை தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன.
அம்பாறை- கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி நற்பிட்டிமுனை சந்தி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு டயர்கள் மரக்குற்றிகள் உள்ளிட்டவைகள் பிரதான பாதையில் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனைகாவல்துறையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து எரியூட்டப்பட்ட டயர்கள் மரக்குற்றிகளை அகற்றி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் அவசர கால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் அப்பகுதியினால் பயணம் செய்யும் மக்களும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுவதை காண முடிகின்றது.