310
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மறுநாள் (2022.05.14) காலை 06.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.
Spread the love