ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரணில் பதவியேற்ற பின்பு உறுதிமொழி!
திருமலையில் இருந்து வந்தது மஹிந்தவின் வாழ்த்துச் செய்திஅமெரிக்கத் தூதரும் வரவேற்பு கோட்டாகோஹம போராட்டம் அதன் இடத்தில் – அதன் வழியில் – தொடர வேண்டும். பொலீஸார் கிட்ட நெருங்கித் தொடமாட் டார்கள். அதை அனுமதியேன். என்னிடம் பெரும்பான்மை இருக்கிறது.
இடைக்கால அரசின் பிரதமராக இன்று பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாகப் பதவியேற்றுக் கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னிடம் பெரும்பான்மை இருப்பதாகவும் புதிய அமைச்சரவை அடுத்தவாரமளவில் அறிவிக்கப்படும் என்றும்தெரிவித்திருக்கிறார்.
தனி ஒருவராக – தேசியப் பட்டியல் முறையில் நாடாளுமன்றதுதுக்குள் நுழைந்தரணில் விக்கிரமசிங்க, எவ்வாறு கட்சிஆதரவு இன்றித் தனித்து நின்று பிரதமராக நாட்டை வழிநடத்தப்போகிறார் என்றகேள்விகள் அரசியல் வட்டாரங்களில்எழுந்துள்ளன.
இதே கேள்வியை பிரிட்டிஷ் செய்தியாளர் ஒருவர் இன்று ரணில் விக்கிரமசிங்
காவிடம் எழுப்பினார்.”1939 இல் வின்சென்ட் சேர்ச்சிலுக்கு நான்கே நான்கு பேரின் ஆதரவு மட்டும் தான் இருந்தது. அவர் எப்படிப் பிரதமர் ஆனார்? அதற்குக் காரணம் அப்போதையநெருக்கடி.
அதனையே நானும் செய்கிறேன்” -என்று செய்தியாளருக்குப் பதிலடி கொடுத்தார் ரணில்.
ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தொடர்பாக கருத்துப்பதிவிட்டிருக்கின்ற கொழும்புக்கான அமெரிக்காவின் தூதர்ஜூலி சங், நாட்டின் நெருக்கடிக்கும் ஸ்திரமின்மைக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இது ஒரு நல்ல முதல் அடி என்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் கிழக்கே திருமலை சீனன் குடாகடற்படைத் தளத்தின் மறைவிடத்தில் தங்கியிருக்கின்ற முன்னாள் பிரதமர்மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை வரவேற்றுருவீற்றர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதேசமயம் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்சவுடன் திரைமறைவு உடன்பாடுசெய்துகொண்டு அதிகாரத்துக்கு வருவோரையும் வீட்டுக்கு அனுப்புவோம்என்ற கோஷங்கள் ரணில் பதவியேற்றகையோடு காலிமுகத் திடலிலும் அலரிமாளிகைக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
12-05-2022