தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், வெளிநாடொன்றுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆர்சாத் மௌலானாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக ஆர்சாத் மௌலானா, ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கெதிரான சாட்சியாக ஆர்சாத் மௌலானா மாறியயுள்ளதால் தான் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், கடந்த 9 ஆம் திகதி அவா் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.