
டெல்லியின் முண்ட்காவில் மெட்ரோ புகையிரத நிலையம் அருகே உள்ள மூன்று மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 4.40 மணியளவில் ஏற்பட்ட தீ கட்டிடம் முழுவதும் பரவி தீ பிடித்து எரிந்ததனால் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தகவலறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
தீவிபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment