174
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Spread the love