
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அன்ட்ரூ சைமண்ட்ஸ்(Andrew Symonds) விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு 46 வயதானும்
நேற்றிரவு டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம் அருகே அவரது காா் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பலத்த காயங்களுக்குள்ளான அன்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலிய அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ஓட்டங்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
நடப்பு ஆண்டில் முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வோா்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment