பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்படுவது இந்த நேரத்தில் பொறுத்தமற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின், வாக்குச்சீட்டில் குறுக்காக கீறிவிடுவோம் என எச்சரித்தார்.
பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்நிலையில், அதற்காக வாக்களிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த வாக்கெடுப்பு அநாவசியமானது எனத் தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, தன் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட 10 குழுக்கள், வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம் என எச்சரித்தார்.
எனினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார்.
இதேவேளை, அஜித் ராஜபக்சவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார யோசனையை ஆதரித்தார்.