Home இலங்கைபுதிய அரசாங்கத்தில் இணைவதாக ஹரின் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் இணைவதாக ஹரின் தெரிவிப்பு

by admin

அமைச்சு பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவா் இதனைத் தெரிவித்துள்ளாா். .

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவா் தொிவித்துள்ளாா்

இன்னும் ஆறு மாதங்களில் எமக்கு ஒரு நாடு இருக்காது, இந்த நெருக்கடியை தீர்க்க புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திஸாநாயக்கவும் இணைவதை தான் விரும்புவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

கோட்டாபய ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க தான் அரசாங்கத்தில் இணைய மாட்டேன் எனத் தொிவித்த அவா் கோட்டா தோல்வியடைந்துவிட்டார், இப்போது இந்த தோல்வியுற்ற நபரை வெளியே அனுப்ப வேண்டும், அது அரசியலமைப்பின் மூலம் நடக்க வேண்டும் எனத் தொிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More