176
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
Spread the love