மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (O+)வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைக்கு (O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே குறித்த (O+)வகை இரத்தம் தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-தற்போது மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏனைய வகை குருதி காணப்படுகின்றது.எனினும்(O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனவே அவசரமாக குறித்த வகை இரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.