உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட மற்றைய பிரதிவாதி மொஹமட் ஹிஜாஸ் என தெரிவிக்கப்படுகிறது.