178
இலங்கை வங்கி மாவத்தைக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை கலைக்க காவற்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடலில் கோட்டா கோ கம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டது.
இதனையடுத்து இலங்கை வங்கி மாவத்தைக்குள் முயன்றதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love